உக்ரேனில் மனிதாபிமான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ரஷ்ய ஆளில்லா விமானம் தாக்குதல்
மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில் மனிதாபிமான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு வளாகம் ரஷ்ய போர் விமானங்களை பயன்படுத்தி தாக்கப்பட்டுள்ளது.
அங்கு பெரும் தீவிபத்து ஏற்பட்டதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் உக்ரைன் பிராந்திய அதிகாரி வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
லிவிவ் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர், நகரத்தை நோக்கிச் சென்ற 15 ரஷ்ய ஆளில்லா விமானங்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியதாகக் கூறினார், ஆனால் மூன்று ட்ரோன்கள் வான் பாதுகாப்பு அமைப்பைக் கடந்து கிடங்குகளைத் தாக்கின.
இதனால் 9,000 சதுர மீட்டர் பரப்பளவில் தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதலில் 300 மெட்ரிக் தொன் மனிதாபிமான பொருட்கள் அழிக்கப்பட்டதை மேற்கு உக்ரைன் நகர மேயர் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.