சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் ரஷ்ய பிரதிநிதி!
ரஷ்ய கூட்டமைப்பு கவுன்சில் சபாநாயகர் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய கூட்டமைப்பு கவுன்சில் சபாநாயகர் வாலண்டினா மத்வியென்கோ இன்று (ஜுலை 09 – முதல் 12 ஆம் திகதிவரை சீனாவில் இருப்பார் என சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
நாடாளுமன்ற ஒத்துழைப்புக்கான சீனா-ரஷ்யா குழுவின் எட்டாவது கூட்டத்தில் சபாநாயகர் கலந்து கொள்வார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக ரஷ்யா சீனாவுடனான தனது உறவை பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவுடன் உறவை வளர்ப்பதில் கவனமாக செயறப்படுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
இருதரப்பு உறவுகள் எல்லை மீறி செல்லும்போது பொருளாதார ரீதியான தாக்கத்தை சீனா எதிர்கொள்ளவேண்டி ஏற்படும் என அவர் கூறியிருந்தார்.
(Visited 3 times, 1 visits today)