புடினின் இல்லத்தில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி
ரஷ்ய அரசாங்க தளங்களை உக்ரைன் இலக்குவைத்ததாக மாஸ்கோவின் கூற்றுகளை “வேண்டுமென்றே செய்த கவனச்சிதறல்” என்றும் சமாதான முன்னெடுப்புகளைத் தடம் புரளச் செய்யும் முயற்சி என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதுவர் காஜா கல்லாஸ் (Kaja Kallas) கூறியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தனியார் வீட்டில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக மாஸ்கோ குற்றம் சுமத்தியுள்ளது.
இந்நிலையில் “உக்ரைனின் உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களை கண்மூடித்தனமாக குறிவைத்த ஆக்கிரமிப்பாளரின்
ஆதாரமற்ற கூற்றுகளை யாரும் ஏற்றுக்கொள்ளக்கூடாது” என காஜா கல்லாஸ் (Kaja Kallas) சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் இருவரின் ஈடுபாட்டுடன் ஜனவரி தொடக்கத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டு துரிதப்படுத்தப்பட வேண்டும் என்ற விருப்பத்தை உக்ரைன் ஜனாதிபதி
செலென்ஸ்கி வெளிப்படுத்தியுள்ளார் என்றும் மரியான என்ற உக்ரைன் பெண் ஒருவர் கூளியுள்ளார்.
அடுத்த ஆண்டு உண்மையிலேயே அமைதியைக் கொண்டுவர முடியுமா? “நாங்கள் உண்மையிலேயே அவ்வாறு நம்புகிறோம், ஆனால் உறுதியாகச் சொல்ல முடியாது. எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம்,” என்றும் மரியா கூறினார்.





