உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய தாக்குதல் – 9 பேர் காயம்
தெற்கு உக்ரைனின் கெர்சனில்(Kherson) உள்ள ஒரு குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய தாக்குதல் நடத்தியதில் நான்கு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் மூன்று மருத்துவ ஊழியர்களும் 9 வயது சிறுமியும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், ஏனையோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கெர்சன் ஆளுநர் ஒலெக்சாண்டர் புரோகுடின்(Oleksandr Prokudin) குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், “மருத்துவ நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைப்பது போர் அல்ல, இது முற்றிலும் பயங்கரவாதம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்” என்று உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ(Yulia Svyrydenko) தெரிவித்துள்ளார்.
(Visited 3 times, 3 visits today)





