ஆசியா

தென்கொரிய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்ய,சீன ராணுவ விமானங்கள்

தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 5 சீன இராணுவ விமானங்களும், 6 ரஷ்ய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக அந்நாட்டு இராணுவம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை ஏவியது. இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 4 மணிநேரம் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் வட்டமடித்த 11 சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் பின்னர் பாதுகாப்பாக வெளியேறின.

முன்னறிவிப்பின்றி சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் தென்கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததற்கு தென்கொரியா எதிர்ப்பு தெரிவித்தது.

சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஊடுருவுவது சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டது .

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!