உக்ரைன் முழுவதும் ரஷ்ய வான்வழித் தாக்குதலில் ஐவர் பலி, எரிசக்தி உள்கட்டமைப்புகள் சேதம்
ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தொடர் தாக்குதலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் உக்ரைனின் பல பிராந்தியங்களில் எரிசக்தி வசதிகள் சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, சபோரிஜியாவில், ரஷ்யாவின் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 10 பேர் காயமடைந்ததாக உக்ரைனின் ஆளுநர் இவான் ஃபெடோரோவ் தெரிவித்தார்.
சபோரிஜியா மற்றும் வடக்கு செர்னிஹிவ் பிராந்தியத்தில் எரிசக்தி வசதிகள் சேதமடைந்துள்ளதாக உக்ரைனின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தனது படைகள் உக்ரைனின் இராணுவ-தொழில்துறை வசதிகள் மற்றும் எரிவாயு மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பை ஒரே இரவில் தாக்கியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நான்காவது குளிர்காலப் போர் நெருங்கி வருவதாலும், சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் ஸ்தம்பிதமடைந்திருப்பதாலும் கடும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மொஸ்கோ சமீபத்திய வாரங்களில் உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





