பெல்கொரோட் நகரில் வசிக்கும் மக்களை அவசரமாக வெளியேற்றும் ரஷ்யா!

உக்ரைனில் நடந்த பயங்கர தாக்குதல்களை அடுத்து, பெல்கொரோட் நகரில் வசிக்கும் மக்களை ரஷ்யா வெளியேற்றத் தொடங்கியுள்ளது.
உக்ரைன்-ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள நகரம் ஒன்றின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இன்றைய (06.01) தினம் ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய இந்த தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களில் 39 பேர் கொல்லப்பட்டதாகவும் 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(Visited 13 times, 1 visits today)