தீவிரம் அடையும் ரஷ்ய – உக்ரைன் போர் – முக்கிய நகரைக் கைப்பற்ற ரஷ்யா கடும் போராட்டம்
ரஷ்ய – உக்ரைன் போர் மீண்டும் தீவிரம் அடைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
உக்ரைனின் மிக முக்கிய நகரான போக்ரோவ்ஸ்க்கைக் கைப்பற்ற ரஷ்யா பல மாதங்களாக முயற்சித்து வருகிறது.
எனினும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் உக்ரைன் படைகள் கடுமையான பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
பெருந்தொகைப்படைகளுடன் போக்ரோவ்ஸ்க் நகருக்குள் ரஷ்யப் படைகள் புகுந்த போதும், உக்ரைனின் கடுமையான தாக்குதல் காரணமாக பின்வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 11 உயரடுக்கு வீரர்களுடன் சென்ற உக்ரைனிய உலங்குவானூர்தி ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்குப் பதிலடியாக ரஷ்யாவின் இராணுவ நிறுவல்களுக்கு எரிபொருள் வழங்கும் கோல்ட்சேவயா குழாய்வழியின் மூன்று கிளைகளை உக்ரைனிய உளவுத்துறை குண்டு வைத்துத் தகர்த்துள்ளதாகவும் தெரியவருகிறது.
அதேவேளை, பல ரஷ்யப் பிராந்தியங்களில் ஒரே இரவில் 98 உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மாஸ்கோ தெரிவித்துள்ளது.





