அமெரிக்காவுடன் செய்துக்கொண்ட அணுவாயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ரஷ்யா!

அமெரிக்காவுடன் செய்துக்கொள்ளப்பட்ட அணுவாயுத ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகுவதாக அறிவித்துள்ளது.
ரஷியாவிற்கு அருகே 2 அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இது வந்துள்ளது.
இது தொடர்பில் ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தின் கீழ் எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட சுயமான கட்டுப்பாடுகளுக்கு இனி நாங்கள் கட்டுப்பட மாட்டோம்.
அமெரிக்காவுக்கு எதிராக, குறுகிய தூரம் மற்றும் நீண்ட தூரம் செல்லும் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.
(Visited 3 times, 3 visits today)