சிரியாவில் உள்ள தளங்களின் நிலை குறித்து புதிய அதிகாரிகளுடன் விவாதிக்கும் ரஷ்யா
சிரியாவில் உள்ள ரஷ்யாவின் இராணுவ தளங்களுக்கு எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று கூறுவது மிக விரைவில் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
டமாஸ்கஸில் புதிய ஆட்சியாளர்களுடன் இது விவாதிக்கப்படும் என்றும் கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
அல்-கொய்தாவின் முன்னாள் துணை அமைப்பான ஹயாத் அல்-தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையிலான ஒரு போராளிக் கூட்டணியின் முன்னேற்றத்திற்குப் பிறகு, பஷர் அல்-அசாத் ரஷ்யாவிற்கு தப்பி ஓடினார் இதன் பின்னர் சிரியாவில் உள்ள இரண்டு மூலோபாய-முக்கியமான ரஷ்ய இராணுவ வசதிகள் குறித்து கேள்விகளை எழுப்பினார்.
தளங்களின் எதிர்காலம் பற்றி கேட்டதற்கு, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “இது அனைத்தும் சிரியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களுடன் விவாதிக்க வேண்டிய ஒரு பொருள்” என்று தெரிவித்தார்.
(Visited 2 times, 1 visits today)