‘Ukraine is a neo-Nazi state’ என்ற தலைப்பில் புதிய பாடத்திட்டத்தை கொண்டுவரவுள்ள ரஷ்யா!
‘Ukraine is a neo-Nazi state’ என்ற தலைப்பில் புதிய புத்தகம் செப்டம்பர் மாதம் முதல் ரஷ்யாவின் பாடத்திட்டத்தில் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ஒரு ‘தீவிர தேசியவாத அரசு’ என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், ரஷ்ய அரசு கருதுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விளாடிமிர் புட்டின்னின் அரசு ஆயிரக்கணக்கான போர் எதிர்பாளர்களை கைது செய்துள்ள போதிலும் இந்த திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த புத்தகத்தில் மேற்கத்திய நாடுகள் தீயவையாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் ரஷ்யாவின் முக்கியமான சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவும் இறுதியில் உக்ரைனுடன் சேர்ந்து போரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விளாடிமிர் புடினின் உதவியாளரான விளாடிமிர் மெடின்ஸ்கி எழுதிய குறித்த புத்தகம், வரலாற்றில் எந்தவொரு புத்தகமும் இவ்வளவு குறிகிய காலத்தில் எழுதப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச அரசியல் விமர்சகர்கள், நாசிசத்தின் மறுபிறப்பு’ இருப்பதாக மாணவர்களை நம்ப வைக்க ரஷ்யா முயற்சிக்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.