வடகொரியாவுக்கு நன்றி தெரிவித்துள்ள ரஷ்யா

உக்ரைனுக்கு எதிரான ஆதரவுக்கு வடகொரியாவுக்கு ரஷ்யா நன்றி தெரிவித்துள்ளது.
உக்ரைனில் தனது நாட்டின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த வடகொரியாவுக்கு ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் நன்றி தெரிவித்துள்ளது.
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உனுக்கு மாஸ்கோவின் “முழுமையான ஆதரவையும் ஒற்றுமையையும்” உறுதியளித்ததாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரேனுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக வடகொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கியதாக குற்றம்சாட்டி, உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து சமீபத்திய மாதங்களில் மேற்கத்திய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யாவும் வடகொரியாவும் மறுக்கின்றன.என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)