கடல் அலைகளை தூண்டி சுனாமியை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த அணுவாயுதத்தை சோதனை செய்த ரஷ்யா!
கடல் அலைகளை தூண்டி சுனாமியை ஏற்படுத்தும் சக்தி கொண்ட, யாராலும் தடுக்க முடியாத சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை ரஷ்யா நீருக்கடியில் இன்று சோதனை செய்துள்ளது.
‘போஸிடொன் (Poseidon) எனப்படும் அணு டார்பிடோவை (nuclear torpedo) சோதனை செய்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார்.
இந்த டார்பிடோவானது 1,600 அடி கடல் ஆழத்தில் பிரித்தானியாவை மூழ்கடிக்கும் திறன் கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை முயற்சியை குறிப்பிடத்தக்க வெற்றி என அறிவித்த புட்டின், இதனை இடைமறிக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

‘டூம்ஸ்டே’ (Doomsday) ஆயுதத்திற்கான முதல் போர்முனைகளை ரஷ்யா 2023 இல் தயாரிக்கத் தொடங்கியது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுமே ‘போஸிடொனை (Poseidon) முற்றிலும் புதிய வகை பழிவாங்கும் ஆயுதம் என்று வர்ணித்துள்ளனர்.
இந்த ஆயுதம் ஏவப்பட்டால் அல்லது பயன்படுத்தப்பட்டால் அந்த கடற்பகுதியை வாழ தகுதியற்றதாக மாற்றும் திறன் கொண்டது எனக் குறிப்பிடப்படுகிறது.





