கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா
புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை ஏவப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் சண்டை தொடர்பாக ரஷ்யா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ரஷ்யாவின் வடக்கு கடற்கரையில் உள்ள வெள்ளைக் கடலில் உள்ள நீருக்கடியில் இருந்து ஏவப்பட்டது,
ரஷ்ய தூர கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கியது.
சோதனை எப்போது நடந்தது என்று அமைச்சகம் தெரிவிக்கவில்லை.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த வாரம் உலகளாவிய அணுசக்தி சோதனை தடைக்கான ரஷ்யாவின் ஒப்புதலை ரத்து செய்யும் மசோதாவில் கையெழுத்திட்டார் என்பதும் குறிப்பிடத்த்தக்கது.