மின் கட்டமைப்பை குறிவைத்து தாக்கும் ரஷ்யா : குளிரில் தவிக்கும் மக்கள்!
ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலால் உக்ரைனின் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் கீவில் சுமார் 3,000 அடுக்குமாடி கட்டிடங்கள் வெப்பமாக்கப்படாமல் உள்ளதாக மேயர் விட்டாலி கிளிட்ச்கோ (Vitali Klitschko) தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் ( Steve Witkoff) இன்று மொஸ்கோவிற்கு பயணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ரஷ்யா “பால்டிக் கடலின் கடலுக்கடியில் உள்ள உள்கட்டமைப்பை சேதப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போது ஐரோப்பிய நாடுகளில் குளிரான வானிலை நிலவுகிறது. இந்நிலையில் உக்ரைனின் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் குளிரில் அவதியுற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





