ஐரோப்பா

உக்ரைன் ஏவிய 36 ஆளில்லா வானூர்திகள் ஒரே இரவில் சுட்டு வீழ்த்திய ரஷ்யா

தென்மேற்கு ரஷ்யாவின் சில பகுதிகளைக் குறிவைத்து இரவோடு இரவாக உக்ரேன் ஏவிய 36 ஆளில்லா வானூர்திகளை ரஷ்யாவின் வான் பாதுகாப்பு முறை அழித்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யா-உக்ரேன் எல்லையில் உள்ள குர்ஸ்க் பகுதியில் 15 வானூர்திகளும் தலைநகர் மாஸ்கோவுக்கு தெற்கே சில நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லிப்பெட்ஸ்க் பகுதியில் ஒன்பது வானூர்திகளும் அழிக்கப்பட்டதாக டெலிகிராம் செயலியில் அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) கூறியது.

தென்மேற்கு ரஷ்யாவின் வோரோனெஸ், பிரையன்ஸ்க் பகுதிகள் ஒவ்வொன்றிலும் நான்கு வானூர்திகளும் அவற்றுக்கு அருகிலுள்ள ஓரியோல், பெல்கரோட் பகுதிகள் ஒவ்வொன்றிலும் இரண்டு வானூர்திகளும் அழிக்கப்பட்டன.

வானூர்தித் தாக்குதல்கள் காரணமாக எவருக்கும் காயமோ பொதுச் சொத்துகளுக்குப் பெருத்த சேதமோ ஏற்படவில்லை என லிப்பெட்ஸ்க், பிரையன்ஸ்க் ஆளுநர்கள் தெரிவித்தனர்.

(Visited 24 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்