உக்ரேனின் ஆளில்லா வானூர்திகள் ஐந்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

உக்ரேன் அனுப்பிய ஐந்து ஆளில்லா வானூர்திகளை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறினர்.
ரஷ்யா மீது தாக்குதல் நடத்த இரவு நேரத்தில் உக்ரேன் அந்த ஆளில்லா வானூர்திகளை அனுப்பியதாக அறியப்படுகிறது.
ஆளில்லா வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்ட இடங்களில் ரஷ்ய அவசரநிலைப் பிரிவு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே, உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் பல கட்டடங்கள் சேதமடைந்தன.
(Visited 20 times, 1 visits today)