போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் ரஷ்யா ; கனடா குற்றச்சாட்டு

ரஷ்யா போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்வதாக கனடிய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ரஷ்யாவின் போலிப் பிரச்சாரங்களுக்கு கனடியர்கள் ஏமாற மாட்டார்கள் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
நாசிபடைகளுடன் தொடர்புடைய உக்ரைன் கனடிய பிரஜைக்கு கனடிய நாடாளுமன்றில் கௌரவிக்கப்பட்டமை குறித்து ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குறிப்பிட்டிருந்தார்.
மேற்குலக நாடுகள் தொடர்பில் ரஷ்யா பிழையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.எனினும், இந்த பிரச்சாரங்களின் மூலம் கனடியர்களை முட்டாளாக்க முடியாது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைனுக்கான ஆதரவு தொடர்ச்சியாக வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகளின் பிரகடனங்களின் பிரகாரம் உக்ரைனை ஆதரிப்பதாக பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
(Visited 20 times, 1 visits today)