ஜெலென்ஸ்கியை தேடப்படும் பட்டியலில் சேர்த்த ரஷ்யா! TASS பரபரப்பு செய்தி
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு எதிராக ரஷ்யா கிரிமினல் வழக்கைத் திறந்து, அவரை தேடப்படும் பட்டியலில் சேர்த்துள்ளதாக, உள்துறை அமைச்சகத்தின் தரவுத்தளத்தை மேற்கோள் காட்டி, அரசு செய்தி நிறுவனமான TASS செய்தி வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 2022 இல் உக்ரைனுடனான மோதல் தொடங்கியதில் இருந்து ரஷ்யா பல உக்ரேனிய மற்றும் பிற ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளது.
சோவியத் கால நினைவுச்சின்னங்களை அழித்ததற்காக பிப்ரவரி மாதம் ரஷ்ய காவல்துறை எஸ்டோனிய பிரதமர் காஜா கல்லாஸ், லிதுவேனியாவின் கலாச்சார அமைச்சர் மற்றும் முந்தைய லாட்வியன் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை தேடப்படும் பட்டியலில் சேர்த்தது.
கடந்த ஆண்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு போர்க்குற்ற குற்றச்சாட்டில் பிடியாணை தயார் செய்த சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ஐ.சி.சி) வழக்கறிஞருக்கும் ரஷ்யா கைது வாரண்ட் பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.