ஐரோப்பா

உக்ரைனுக்கு கடுமையான பதிலடி கொடுக்க தயாராகும் ரஷ்யா!

உக்ரைனுக்கு ஊடுருவினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்யா சூளுரைத்துள்ளது.

ரஷ்யா, தனது வட்டாரத்துக்குள் உக்ரைனியக் கிளர்ச்சியாளர்கள் இனி ஊடுருவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

பெல்கோரோட் (Belgorod) வட்டாரத்தில் ஊடுருவியவர்களை விரட்டியடித்தபோது 70 பேர் உயிரிழந்துள்ளதாக மொஸ்கோ கூறியது.

அமெரிக்கா தயாரித்த ராணுவச் சாதனங்களைப் பயன்படுத்தி ரஷ்ய வட்டாரங்களில் உக்ரேனியர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கிரெம்ளின் தெரிவித்தது.

அமெரிக்காவின் Humvee ரக ராணுவ கனரக வாகனம் குறித்த காணொளியை மாஸ்கோ வெளியிட்டது. தாக்குதல் நடத்தியவர்களை விரட்டியபோது அந்த வாகனம் நாசமானதாக ரஷ்யா கூறியது.

பூசலில் மேற்கத்திய நாடுகளின் நேரடிப் பங்களிப்பு அதிகரித்திருப்பதாகக் கிரெம்ளின் சாடியது. ஆனால் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்தும்படி உக்ரேனை ஊக்குவிக்கவில்லை என்று வாஷிங்டன் கூறியது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!