ஐரோப்பா

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ரஷ்யா : வீர்களின் உடலை ஒப்படைக்க இணக்கம்!

3 ஆண்டுகளை கடந்து போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைனுடன் தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

போரில் கொல்லப்பட்ட மூவாயிரத்திற்கும் அதிகமான உக்ரைன் ராணுவ வீரர்களின் உடல்களை ஒப்படைக்கவும் தயார் என்று புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்- ரஷியா இடையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட நேரடி அமைதி பேச்சுவார்த்தை துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது.

இதில் இருநாட்டு அதிகாரிகளும் நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  2 மணி நேரத்திற்கும் குறைவாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

இருநாடுகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை பரிமாற்றிக்கொள்ள ஏற்றுக்கொண்டன. இதனைத் தொடர்ந்து கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்கு இடையிலும் உக்ரைன் – ரஷியா மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!