கார்கிவில் முன்னேற்றம் கண்டுள்ள ரஷ்யா ; உக்ரைன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
தங்கள் நாட்டின் வடகிழக்கே அமைந்துள்ள கார்கிவ் பிராந்தியத்தில் அண்மைக்காலமாக முன்னேற்றம் கண்டுவரும் ரஷ்யா அங்குவசிப்பவர்களை படுகொலை செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்த்து உள்துறூ அமைச்சர் இகார் க்ளிமென்கோ வெளியிட்டுள்ள பதிவில், கார்கிவ் பிராந்தியத்தில் ரஷ்ய எல்லையிலிருந்து 5km தொலைவில் உள்ள வாவ்சான்ஸ்க் நகரை சுற்றிலும் முன்னேறி வரும் ரஷ்யா படையினர் பொதுமக்களை கைதிகளாக பிடித்து செல்கின்றனர்.\
எங்களுக்கு கிடைத்துள்ள உளவு தகவலின் அடிப்படையில் தாங்கள் கைப்பற்றிந பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற ரஷ்ய படையினர் அனுமதிப்பில்லை அவர்களை கைது செய்து சுரங்கப் பகுதிகளில் ரஷ்ய ராணுவம் அடைத்து வைக்கிறது.
மேலும் பொதுமக்களை நோக்கி ரஷ்ய வீர்ர்கள் துப்பாக்கி சூடு நடத்திய தகவலும் வெளியாகியுள்ளது. தங்கள் உத்தரவை ஏற்காத பொதுமக்களை ரஷ்ய படையினர் சுட்டு கொல்கின்றனர். இது மிகப் பெரிய போர் குற்றமாகும் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் இக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா கடந்து 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படைநெடுத்து உக்ரைனின் கிரக்கு மற்றம் தெற்கு பிராந்தியங்களான டொனஸ்க்,லுஹான்ஸ்க்,கெர்சன்,ஸபோரிஷியா ஆகியவற்றின் கணிசமான பகுதிகளை கைப்பற்றியள்ளது.
இந்த சூழலில் வடகிழக்கு பிராந்தியமான கார்கிவையும் கைப்பற்ற ரஷ்யா முன்னேறி வருகிறது.