ஈரானுக்கு கைக்கொடுத்த ரஷ்யா : வெற்றிகரமாக ஏவப்பட்ட செயற்கைக்கோள்!
ரஷ்யா 03 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
பயா (Paya), கோவ்சர் (Kowsar) மற்றும் ஜாஃபர்-2 (Zafar-2) என அழைக்கப்படும் மூன்று ஈரானிய செயற்கைக் கோள்கள் நேற்று கிழக்கு ரஷ்யாவில் உள்ள வோஸ்டோக்னி (Vostochny) ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
இதில் பயா (Paya) என அழைக்கப்படும் செயற்கைக்கோள் ஈரான் இதுவரை விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்களில் முதன்மையானது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள்கள் 3 மீட்டர் தெளிவுத்திறன் கொண்ட படங்களைக் கொண்டுள்ளதாகவும், அவை நீர்வளம், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைக்கு பங்களிப்பு செய்வதாகவும் அந்த அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் ஆயுட் காலம் ஐந்து ஆண்டுகளாகும்.
ரஷ்யா அவ்வப்போது ஈரானின் செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் அனுப்புகிறது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை எடுத்துக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.





