சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு” ஒப்புக்கொண்ட போதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவிய ரஷ்யா!

இந்த வாரம் “சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு” ஒப்புக்கொண்ட போதிலும், விளாடிமிர் புடின் உக்ரைன் மீது 100க்கும் மேற்பட்ட புதிய ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
30 நாள் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கான மேற்கத்திய நாடுகளின் கோரிக்கையை நிராகரித்ததை தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புடின் கொடிய போரை முடிவுக்குக் கொண்டுவரத் தொடங்கவில்லை என்றால், டொனால்ட் டிரம்பின் ஆதரவுடன், பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என மேற்கத்தேய நாடுகளின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் அவ்வாறான தடைகள் ரஷ்யாவுக்குத் தடைகள் பழகிவிட்டதாக ரஷ்ய அரசாங்கப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கொவ் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)