உக்ரைனின் கிழக்குப் பகுதியில் சரமாரியாக தாக்குதல் நடத்திய ரஷ்யா – 11 பேர் பலி!
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் எட்டு குடியிருப்பு கட்டிடங்களும் ஒரு நிர்வாக கட்டிடமும் சேதமடைந்துள்ளதாக உக்ரைனின் அவசர சேவைகள் தெரிவித்துள்ளன.
ரஷ்ய நிர்வாகத்திற்கு உட்பட்ட டோனெட்ஸ்க் நகரின் வடமேற்கே, கிழக்கு உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியில் உள்ள டோப்ரோபிலியா நகரத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.





