ஒரே இரவில் 322 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா – குழந்தைகள் உள்பட 11 பேர் படுகாயம்!
ரஷ்யா ஒரே இரவில் 322 ட்ரோன்கள் மூலம் உக்ரைனை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த ட்ரோன்களில் 292 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டோ, அல்லது வேறு வகையிலோ இடைமறிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவால் ஏவப்பட்ட பல ட்ரோன்கள், ஸ்டாரோகோஸ்டியான்டினிவ் நகரம் உட்பட உக்ரைனின் க்மெல்னிட்ஸ்கி பகுதியை இலக்காகக் கொண்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
உள்ளூர் அவசர சேவைகளின்படி, கார்கிவ் பகுதியில் இரவு முழுவதும் நடந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட பதினொரு பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.





