ஐரோப்பா

உக்ரைன் முழுவதும் 600இற்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைன் முழுவதும் 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சப்சான் தந்திரோபாய ஏவுகணை அமைப்பு, பல்நோக்கு தாக்குதல் மற்றும் உளவு ட்ரோன்கள், ரோபோடிக் போர் வாகனங்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

“தாக்குதலின் நோக்கங்கள் அடையப்பட்டன” என்றும் “அனைத்து நியமிக்கப்பட்ட இலக்குகளும் தாக்கப்பட்டன” என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்நிலையில் தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும்  டஜன் கணக்கானவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தாக்குதல்கள் உக்ரைனின் மத்திய நகரமான டினிப்ரோ மற்றும் பரந்த டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியையும், மைக்கோலைவ், செர்னிஹிவ் மற்றும் சபோரிஜியா பகுதிகளையும், பொல்டாவா, கீவ், ஒடேசா, சுமி மற்றும் கார்கிவ் பகுதிகளில் உள்ள சமூகங்களையும் குறிவைத்ததாக ஜெலென்ஸ்கி மேலும் கூறியுள்ளார்.

“இதுபோன்ற ஒவ்வொரு தாக்குதலும் ஒரு இராணுவத் தேவை அல்ல, ஆனால் பொதுமக்களை பயமுறுத்தி எங்கள் உள்கட்டமைப்பை அழிக்க ரஷ்யாவின் திட்டமிட்ட உத்தி” என்று அவர் தனது எக்ஸ் தள பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்