இரவோடு இரவாக உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைனில் இரவோடு இரவாக ரஷ்யா 14 ட்ரோன்கள் தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையியல் வான் பாதுகாப்பு அமைப்புகள் கார்கிவ் மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதிகளில் ஒன்பது ட்ரோன்கள் மற்றும் மூன்று வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளை அழித்ததாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளில் இருந்து இரண்டு S-300 ஏவுகணைகளையும், ஒரு வான்-மேற்பரப்பு Kh-31P ஏவுகணையையும் ரஷ்யா ஏவியது என்று விமானப்படைதெரிவித்துள்ளது.
வீழ்த்தப்படாத ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் என்ன ஆனது என்பது தொர்பில் தகவல் வெளியாகவில்லை
(Visited 12 times, 1 visits today)