ஐரோப்பா

உக்ரைனின் கார்கிவில் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா ; ஐவர் பலி

வடகிழக்கு உக்ரேனிய நகரமான கார்கிவில் ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் குறைந்தத்து 5 பேர் உயிரிழந்ததாகவும் 24 பேர் காயமுற்றதாகவும் அந்த பகுதியின் கவர்னர் ஓரே சினிஹூபோவ் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான பெரும்பாலானோர் 5 அடுக்கு கட்டடத்தில் வசித்து வந்ததாகவும் இந்த தாக்குதலால் தீயணைப்பு இயந்திரம் மற்றும் அவசர ஊர்தி ஆகியவையும் சேதமடைந்ததாவும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்ய ராணுவம் 5 கணைகளை ஏவியதில் குறைந்தது 20க்கும் அதிகமான குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

உக்ரைன் தலைநகர் கீவில் தாழ்வான இலங்கை தாக்கி அழிக்கும் க்ரூஸ் ஏவுகணை தாக்கியதாகவும் கார் பழுது நிலையத்தில் நின்றிருந்த 6 கார்கள் ஏவுகணையின் உதிரி பாகங்கள் வெடித்ததில் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்பகிர்மான நிலையம் சேதமடைந்துள்ளது. பின்னர் மின்சார இணைப்பு சீர்ப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் இரண்டு ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் நிலையில் உக்ரைனின் மின்பகிர்மான நிலையங்கள் தொடர்தலுக்கு உள்ளாவதால் அடிக்கடி மின்வெட்டுகள் ஏற்படுகின்றன.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்