உக்ரைன் மற்றும் அமெரிக்காவிற்கு பதிலளிக்க தயராகும் ரஷ்யா : ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் தயார்நிலையில்!
உக்ரைன் அமெரிக்க ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யாவும் அணுவாயுதங்களை பயன்படுத்த தயாராகி உள்ளது.
இதன்படி அதி சக்திவாய்ந்த அணுவாயுதத்தை கிரெம்ளின் ஒரு புதிய இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையை தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனின் புதிய போர் உக்தி தொடர்பில் ரஷ்ய ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள புட்டின், ஒரேஷ்னிக் – ரஷ்யன் என்று அழைக்கப்படும் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளை அழிக்கக்கூடிய ஏவுகணை தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நிபுணர்களின் கருத்துப்படி, 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி ரஷ்யா 5,580 அணு ஆயுதங்களை கையிருப்பில் வைத்துள்ளது. அவற்றில் 1,700 க்கும் மேற்பட்டவை ஏவுவதற்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, ரஷ்யாவின் கையிருப்பு உலகின் மிகப்பெரிய அணு ஆயுதக் குவியலாக உள்ளது, மேலும் 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் மிகப்பெரிய உறுதிசெய்யப்பட்ட மூலோபாய ரீதியில் பயன்படுத்தப்பட்ட ஆயுதக் களஞ்சியத்தை அந்த நாடு கொண்டுள்ளது.