2029 அல்லது 2030 ஆம் ஆண்டில் மிகப் பெரிய போருக்கு தயாராகும் ரஷ்யா!
2029 அல்லது 2030 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பா மீது ஒரு ‘பெரிய போரை’ கட்டவிழ்த்துவிட ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா மற்றுமொரு நில அபகரிப்பிற்கு தயாராகி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்ய இராணுவத் துறையைப் பார்க்கும்போது, அவர்கள் தங்கள் உற்பத்தியை அதிகரித்து வருவதைக் காண்கிறோம். எங்கள் மதிப்பீட்டில், அவர்கள் இந்தப் போரைத் தொடர விரும்புகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ரஷ்யா மீது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை கடந்த ஒரு மாதத்தில், டொனெட்ஸ்கில் (Donetsk) ஒன்பது குடியிருப்புகள் மற்றும் கிராமங்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கைப்பற்றியதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)




