ஐரோப்பா முக்கிய செய்திகள்

நேட்டோவை சீண்டி பார்க்கும் ரஷ்யா – 03 ஆம் உலக போர் தொடர்பில் விழிப்புடன் இருக்கும் நாடுகள்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பெலாரஸுடன் மேற்கொண்ட போர் பயிற்சியை தொடர்ந்து தற்போது அவ்வவ்போது நேட்டோ நாடுகளை சீண்டி பார்த்துவருகிறார்.

முதலில் ஜார்ஜியாவிற்குள் ரஷ்யாவின் ட்ரோன்கள் நுழைந்திருந்தது. இந்த விடயம் தணிவதற்குள் அடுத்ததாக எஸ்டோனியாவிற்குள் போர் விமானங்கள் நுழைந்திருந்தன.

இது உக்ரைனுக்கு அப்பால் ரஷ்யா தனது எல்லைகளை விரிவுப்படுத்த நோட்டமிடுவதாக பல்வேறு தரப்பினரும் தங்களது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கூட்டணிக்கு எதிரான எதிர்கால மோதல்களுக்கான பாடங்களைக் கற்றுக்கொள்ள விளாடிமிர் புடின் வேண்டுமென்றே நேட்டோவைத் தூண்டிவிடுகிறார் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேட்டோ செய்தித் தொடர்பாளர் அலிசன் ஹார்ட் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை பொறுப்பற்ற  நடத்தை  என விமர்சித்திருந்தார்.

நேட்டோ  விதியின்படி, ஒரு உறுப்பினர் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தங்களை தற்காத்துக்கொள்வதற்காக அனைத்து நாடுகளும் ஒன்று சேரும். அவ்வாறு சேரும் போது மற்றுமொரு உலகப் போர் உருவாக வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் தங்களை தற்காத்துக்கொள்வது தொடர்பான பாதுகாப்பு உபாயங்களை துண்டுப்பிரசுரங்களாக வெளியிட்டு மக்களை தயார்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்யாவின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தங்கள் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!