ஐரோப்பா

பிரித்தானியாவால் வழங்கப்பட்ட சக்தி வாய்ந்த ஏவுகணைகளை இடைமறித்த ரஷ்யா!

ரஷ்யாவின் வான் பாதுகாப்புப் படைகள் பிரித்தானியாவினால் வழங்கப்பட்ட இரண்டு Storm Shadow cruise ரக ஏவுகணைகளை இடைமறித்துள்ளதாக அறிவித்துள்ளன.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்,  தொலைதூர ஏவுகணைகள் எங்கு இடைமறிக்கப்பட்டன என்பதை  விவரிக்கவில்லை.

அமெரிக்காவால் கட்டமைக்கப்பட்ட குறுகிய தூர HIMARS ரக ஏவுகணை மற்றும் HARM ஏவுகணைகளை இடைமறித்துள்ளதுடன், 19 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குமாறு மேற்கு நாடுகளுக்கு வோலோடிமிர் ஜெலென்க்சி அழைப்பு விடுத்ததை அடுத்து இங்கிலாந்து இந்த மாத தொடக்கத்தில் Storm Shadows ஏவுகணைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்