யெவ்ஜெனி பிரிகோஷின் மரணத்தை உறுதிப்படுத்தியது ரஷ்யா
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஷின் இறந்துவிட்டதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
வக்னர் தலைவர் பயணித்த தனியார் விமானம் மாஸ்கோவில் விபத்துக்குள்ளான 04 நாட்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 10 பேர் இருந்ததாகவும், அவர்கள் வாக்னரின் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பயணிகள் பட்டியலில் வாக்னர் தலைவரின் பெயரும் இருப்பதை ரஷ்யா முன்பு உறுதிப்படுத்தியது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் தனது முன்னாள் நம்பிக்கையாளருக்கு இரங்கல் தெரிவித்தார், ஆனால் பிரிகோஷின் இறந்துவிட்டதாக அவர் ஒருபோதும் கூறவில்லை.
எவ்வாறாயினும், இது தொடர்பான விமான விபத்தில் யெவ்ஜெனி பிரிகோஷின் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்விபத்தில் உயிரிழந்த பத்து பேரின் உடல்களில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பகுப்பாய்வின் போது வாக்னர் தலைவரும் விமான விபத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பில் ஆராய்ந்த விசேட குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இறந்தவர்களில் வாக்னரின் இராணுவத்தைச் சேர்ந்த மேலும் பல மூத்தவர்களும் உள்ளதை ரஷ்யாவும் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், யெவ்ஜெனி பிரிகோஷின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ரஷ்யா கடுமையாக மறுப்பதாக கூறுகிறது.