1,000 வீரர்களின் உடல்களை உக்ரைனிடம் ஒப்படைத்த ரஷ்யா!
கைதிகள் பறிமாற்றத்தின் ஒரு பகுதியாக 1,000 உக்ரேனிய வீரர்களின் உடல்களை ரஷ்யா உக்ரைனுக்கு அனுப்பிவைத்துள்ளதாக கியேவ் (Kyiv) தெரிவித்துள்ளது.
இதற்கு பிரதியீடாக 38 உடல்களை ரஷ்யா பெற்றதாக மொஸ்கோவின் தலைமை பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி (Vladimir Medinsky) கூறினார்.
உடல்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் வெள்ளை குளிர்சாதன பெட்டிகளும், அதற்கு அருகில் பயோஹசார்ட் (biohazard) உடைகள் அணிந்த நபர்கள் நிற்பதைக் காட்டும் ஒரு புகைப்படத்தையும் மெடின்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால மோதலின் போது கியேவ் மற்றும் மொஸ்கோ ஆயிரக்கணக்கான வீரர்களின் உடல்களை பரிமாறிக்கொண்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்பினரும் எட்டிய ஒப்பந்தத்தின் கீழ் இந்த பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.





