டினிப்ரோவில் ட்ரோன் தாக்குதல் நடத்தி குடியிருப்புகளை அழித்த ரஷ்யா – நால்வர் பலி, பலர் காயம்!

மத்திய உக்ரைன் நகரமான டினிப்ரோவில் ஒரே இரவில் ரஷ்யர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் 22 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலால் ஒரு உணவக வளாகம் மற்றும் பல குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கிரையாகியதாக கூறப்படுகிறது.
நாட்டின் நான்காவது பெரிய நகரமான டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநர் செர்ஹி லைசாக் கூறுகையில், குறைந்தது 10 தனியார் வீடுகள் மற்றும் ஒரு உயரமான அடுக்குமாடி கட்டிடம் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
டெலிகிராமில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டில், 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)