உக்ரேனிய அணுமின் நிலையத்தை அணுக ஐநா அணுசக்தி ஆய்வாளர்களுக்கு ரஷ்யா அனுமதி மறுப்பு
ஜபோரிஜியாவில் ஆக்கிரமித்துள்ள உக்ரேனிய அணுமின் நிலையத்தின் சில பகுதிகளுக்கு ஐநா ஆய்வாளர்கள் அணுகுவதை ரஷ்யா மறுத்துள்ளது என்று ஐநா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
2022 இல் மாஸ்கோ உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து சில நாட்களில் ஜபோரிஜியா ஆலை ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது.
அணுசக்தி நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சண்டையிடுவது ஐரோப்பா முழுவதற்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகள் இனி மின்சாரத்தை உற்பத்தி செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)