ஆங்கில கால்வாயில் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பயிற்சிகளை மேற்கொண்ட ரஷ்யா!

ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஷ்ய கடற்படை போர்க்கப்பல் ஆங்கில கால்வாயில் பயிற்சிகளை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ப்ராஜெக்ட் 22350 போர்க்கப்பல் அட்மிரல் கோலோவ்கோ – சேனல் வழியாக சென்றதாக ரஷ்யாவின் அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதில் சிர்கான் ஹைப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த கேனலில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகள் மற்றும் ஆபத்தான இலக்குகளைத் தவிர்ப்பதற்கான பயிற்சிகளை நடத்தியjாக தெரிவித்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், அட்மிரல் கோலோவ்கோ, நவம்பர் 2 ஆம் தேதி, ரஷ்யாவின் செவெரோமோர்ஸ்கில் உள்ள கடற்படைத் தளத்தை விட்டு வெளியேறிய சேனலின் குறுகலான பகுதியை – பாஸ் டி கலேஸைக் கடந்ததாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 15 times, 1 visits today)