வெனிசுலா கடற்கரையில் படகுகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா கண்டனம்
வெனிசுலா கடற்கரையில் சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்டு சென்றதாகக் கூறப்படும் படகின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.
வெனிசுலா வெளியுறவு அமைச்சர் யுவான் கிலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், சர்வதேச கடல் பகுதியில் நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய சூழலில் வெனிசுலாவின் தலைமை மற்றும் மக்களுக்கு ரஷ்யா முழு ஆதரவையும் ஒற்றுமையையும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 3ம் திகதி கரீபியன் கடலில் ஒரு படகில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாக குற்றம் சாட்டி, அமெரிக்கா நான்காவது முறையாக தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.





