ரஷ்யா – சீனாவுக்கு இடையிலான உறவு – இரகசியத்தை அம்பலப்படுத்திய அமெரிக்கா
போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்யாவுக்குச் சீனா உதவுவதாக அமெரிக்காவின் புதிய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கும் தடைகளில் இருந்து தப்பச் சீனா உதவுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
உக்ரேனியப் போரில் பயன்படுத்தக்கூடிய முக்கியத் தொழில்நுட்பத்தை ரஷ்யாவுக்குச் சீனா வழங்கியிருக்கக்கூடும் என அமெரிக்க உளவுத் தகவல் சந்தேகிக்கிறது.
ரஷ்யாவுக்குள் வரும் பொருள்களை ஆராய்ந்து அமெரிக்கத் தேசிய உளவுத்துறை இயக்குனர் அலுவலகம் தகவல் தருகிறது.
சீனாவுக்குச் சொந்தமான தற்காப்புத் துறை நிறுவனங்கள் ரஷ்யாவுக்குப் பல வகையான ராணுவப் பொருள்களைத் தந்திருப்பது அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இராணுவப் பொருள்கள் எதையும் ரஷ்யாவுக்குத் தரவில்லை என்று சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.
போர்க்களத்தில் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய ஆயுதம் எதையும் சீனா தந்திருப்பதற்கான ஆதாரம் இல்லை என்றும் அமெரிக்க உளவுத்தகவல் சொல்கிறது.