பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைக்க ரஷ்யா, சீனா இணக்கம்!
ரஷ்யாவும் சீனாவும் தொடர்ந்து வலுவடைந்து வரும் இருதரப்பு உறவுகளின் ஒரு பகுதியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
சீன வெளியுறவு மந்திரி வாங் யீயை சந்தித்த பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிரான ரஷ்யாவின் போரில் சீனாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். இதன்போது இருதரப்பினரும் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டனர்.
அவ்வறிக்கையில், ரஷ்ய-சீன ஒத்துழைப்புக்கு வரம்புகள் இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மார்ச் 22 அன்று மாஸ்கோவில் உள்ள புறநகர் திரையரங்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவை முதலில் ஆதரித்தது சீனா தான், வருத்தம் தெரிவித்தது. அந்த தாக்குதலில் 144 ரஷ்யர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)