உக்ரைனில் மேலும் இரு கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா!
உக்ரைனின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள இரு கிராமங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஜாகிட்னே (Zakitne) கிராமத்தையும், தென்கிழக்கு சபோரிஜியா (Zaporizhzhia) பகுதியில் உள்ள ஒலெனோகோஸ்டியான்டினிவ்கைனையும் (Olenokostiantynivkain) ரஷ்ய துருப்புக்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போர் தொடர்பாக உக்ரைனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கான ஆவணங்கள் அடுத்த வாரம் கையெழுத்திடப்படலாம் என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார்.
குறித்த ஒப்பந்தங்கள் எட்டப்படுவதற்கு முன்னதாக ரஷ்யா உக்ரைனில் முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





