உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரேனிய மின் உற்பத்தி நிலையம் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் வியாழக்கிழமை ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல் நடத்தியுள்ளது!
வியாழன் அன்று உக்ரைன் மின் கட்டம் பெரிய அளவிலான தாக்குதலுக்கு ஆளானதை அடுத்து உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யர்கள் ஏன் மிகப்பெரிய தாக்குதல் நடத்தினார்கள் என்பதை இப்போது புடின் விளக்குகிறார்.
குறிப்பாக, உக்ரைன் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் வியாழன் அன்று நடத்தப்பட்ட பெரிய தாக்குதல், ரஷ்ய எல்லைக்குள் மேற்கத்திய ஏவுகணைகளைப் பயன்படுத்தியதற்கு பதில் என்று அவர் கூறுகிறார்.
நிச்சயமாக, நாங்கள் ஏற்கனவே கூறியது போல், நீண்ட தூர மேற்கத்திய ஏவுகணைகள் மூலம் ரஷ்ய பிரதேசத்தில் நடந்து வரும் தாக்குதல்களுக்கு பதிலளிப்போம். கூடுதலாக, நவம்பர் 21 அன்று பரிசோதனை செய்த ஓரேஷ்னிக் (புதிய வகை ரஷ்ய ஏவுகணை )பரிசோதனை செய்ததை தொடருவோம் என்றார்.
உக்ரேனிய பிரதேசத்தில் பல இலக்குகளை நாம் தாக்க முடியும். அது இராணுவ வசதிகள்,பாதுகாப்பு மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் அல்லது உக்ரேனிய தலைநகர் கியேவில் பெரிய இலக்குகளாக இருக்கலாம் என்று ஜனாதிபதி கூறுகிறார்.
உக்ரேனிய எரிசக்தி மந்திரி Herman Halusjtjenko, வியாழனன்று முகநூலில் ஒரு பதிவில், இது ஒரு “பாரிய விரோத தாக்குதல் என்றும் – மீண்டும், எரிசக்தி துறை பாரிய விரோத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
உக்ரைன் முழுவதும் எரிசக்தி வசதிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன என்று எழுதியுள்ளார்.
523,000 பேர் எல்விவ் பிராந்தியத்திலும், சுமார் 215,000 பேர் வோலின் பிராந்தியத்திலும், 280,000 பேர் ரிவ்னே பிராந்தியத்திலும் மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என்று ஆளுநர்கள் செய்தி சேவையான டெலிகிராமில் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, ரஷ்யா 90 ஏவுகணைகள் மற்றும் 100 ட்ரோன்களை ஏவியது என்று புடின் கூறுகிறார்.