எரிவாயு டேங்கர் கப்பலை தாக்கிய ரஷ்யா – அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்!
உக்ரைனின் ஒடேசா பகுதிக்கு அருகே ரஷ்யாவின் தாக்குதலால் எரிவாயு டேங்கர் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்நிலையில் குறித்த கடற்பகுதிக்கு அண்மையில் உள்ள எல்லை கிராமமான துல்சியாவிலிருந்து (Tulcea) மக்களை வெளியேற்ற ருமேனிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் இருந்து குறைந்தது 50 பேர் மற்றும் அவர்களின் கால்நடைகள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
துல்சியா (Tulcea) கிராமத்துடன் சியால்சியோய் (Ceatalchioi) மற்றும் ப்ளாரு (Plauru) ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை நேட்டோ படைகளை தாக்குவதற்கு சமம் என்று பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டாம் துகென்தாட் (Tom Tugendhat) கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





