உக்ரைனில் எரிசக்தி மற்றும் குடியிருப்பு தளங்களை தாக்கிய ரஷ்யா – ஆறு பேர் மரணம்
உக்ரைனில் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு இலக்குகள் மீது ரஷ்யா ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
டினிப்ரோ(Dnipro) நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சபோரிஜியாவில்(Zaporizhia) மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் பொல்டாவா(Poltava), கார்கிவ்(Kharkiv) மற்றும் கீவ்(Kyiv) பகுதிகளில் முக்கிய எரிசக்தி வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும், மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ(Yulia Svyrydenko) குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா 450க்கும் மேற்பட்ட குண்டுவீச்சு ட்ரோன்களையும் 45 ஏவுகணைகளையும் ஏவியதாக உக்ரைன் விமானப்படை குற்றம் சாட்டியுள்ளது.





