ஐரோப்பா

மூன்று நாள் போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா – ஏற்குமா உக்ரைன்?

உக்ரைன்-ரஷ்யா மோதலில் மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

அதன்படி, இந்த போர் நிறுத்தம் மே 8 முதல் மே 11 வரை அமலில் இருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போரின் முடிவைக் குறிக்கும் வெற்றி நாள் கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மனிதாபிமானக் கருத்தில் கொண்டு ரஷ்ய ஜனாதிபதி இந்த போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், உக்ரைன் இந்த போர் நிறுத்தத்தை மீறினால், எதிர் தாக்குதல் நடத்த ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, உக்ரைனுடன் 30 மணி நேர போர்நிறுத்தத்தை அறிவிக்க ரஷ்யா நடவடிக்கை எடுத்தது.

இருப்பினும், போர் நிறுத்த காலத்தில் தாக்குதல்கள் குறைந்திருந்தாலும், இரு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர்.

இவ்வாறான சூழ்நிலையில் தற்போதைய போர் நிறுத்தத்தை உக்ரைன் ஏற்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(Visited 38 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்