“டாக்ஸிக்” குறித்து ருக்மிணி வசந்த் கொடுத்த சூப்பர் அப்டேட்
கே.ஜி.எப் என்ற படத்தின் மூலம் உலகளவில் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தவர்தான் யாஷ்.
யாஷ் நடிக்கும் அடுத்த படம் தான் டாக்ஸிக். இப்படத்தில் யாஷ் உடன் நயன்தாரா, ஹூமா குரேஷி உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதேவேளை, Ace, மதராஸி மற்றும் காந்தாரா சாப்டர் 1 ஆகிய படங்களில் நடித்த ருக்மிணி வசந்த் டாக்ஸிக் படத்தில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடி வந்த ருக்மிணி வசந்த் டாக்ஸிக் படம் குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது “நாம் இதுவரை கன்னடம் அல்லது இந்திய சினிமாவில் பார்த்த எதையும் போல் இல்லாமல் டாக்ஸிக் வித்தியாசமாக இருக்கும்” என கூறியுள்ளார்.
இதனால் இப்படத்தை காண ரசிகர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

(Visited 2 times, 2 visits today)





