இஸ்ரேலுக்கு 4 பில்லியன் இராணுவ உதவியை விரைவுபடுத்துவதற்கான பிரகடனத்தில் கையெழுத்திட்ட ரூபியோ

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சனிக்கிழமை (மார்ச் 1) இஸ்ரேலுக்கு கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர் ராணுவ உதவியை விரைவுபடுத்தும் ஆணையில் கையெழுத்திட்டதாகக் கூறியுள்ளார்.
டிரம்ப் நிர்வாகம், முக்கிய வெளிநாட்டு ராணுவ விற்பனையில் கிட்டத்தட்ட 12 பில்லியன் டொலருக்கு இஸ்ரேலுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக ரூபியோ ஓர் அறிக்கையில் கூறினார்.
இது இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் நீண்டகால உறுதிப்பாட்டை நிறைவேற்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது உட்பட அனைத்து வழிகளையும் அமெரிக்கா பயன்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
காஸா போரில் ஹமாஸ் போராளிகளுடனான சண்டைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள, அதன் மத்திய கிழக்கு நட்பு நாட்டிற்கு ராணுவ உதவியை விரைவுபடுத்த நெருக்கடிநிலை அதிகாரத்தைப் பயன்படுத்தியதாக ரூபியோ கூறினார்.
3 பில்லியன் டொலர் மதிப்புள்ள வெடிகுண்டுகள், அழிப்புக் கருவிகள் உள்ளிட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு விற்க பிப்ரவரி 28ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சு கூறியது