செய்தி விளையாட்டு

கிளாசனுக்கு ரூ.23 கோடி, கம்மின்ஸ்-க்கு ரூ.18 கோடி.. காவ்யா மாறன் போடும் திட்டம்

ஐதராபாத் அணி தரப்பில் நட்சத்திர வீரரான கிளாசனுக்கு ரூ.23 கோடியும், கேப்டன் கம்மின்ஸ்-க்கு ரூ.18 கோடியும், அபிஷேக் சர்மாவுக்கு ரூ.14 கோடியும் ஊதியமாக அளித்து ரீடெய்ன் செய்ய அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் மெகா ஏலத்திற்கு முன்பாக 6 வீரர்களை தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதில் 5 சர்வதேச கிரிக்கெட் வீரர்களும், ஒரு அன்-கேப்ட் வீரரையும் தக்க வைத்து கொள்ளலாம்.

அந்த வகையில் ஒவ்வொரு அணியும் ரீடெய்ன் செய்ய கூடிய வீரர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஐதராபாத் அணி தரப்பில் அதிகளவிலான வெளிநாட்டு வீரர்களை தக்க வைக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், கடந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து வருகிறார்.

இதனிடையே பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியுடன் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஐதராபாத் அணியின் ரிடென்ஷன் திட்டங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதில், தென்னாப்பிரிக்கா அதிரடி வீரரான கிளாசனுக்கு ரூ.23 கோடி வரை ஊதியம் அளிக்க ஐதராபாத் அணி முன் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் பேட் கம்மின்ஸை ரூ.18 கோடிக்கு தக்க வைக்கவும், இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவுக்கு ரூ.14 கோடி ஊதியம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இருவரையும் தக்க வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கிளாசனுக்கு ரூ.23 கோடி ஊதியம் என்பது இந்திய வீரர்களுக்கே கிடைக்காத ஊதியமாகும்.

ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களில் இதுவரை விராட் கோலி மற்றும் கேஎல் ராகுலுக்கு ரூ.17 கோடியை ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் கொடுத்ததே இதுவரை வரலாறாக இருந்து வந்தது.

தற்போது ரீடெய்ன் செய்யப்படுவதற்கு அதிகபட்ச தொகையாக ரூ.18 கோடி ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட போதும், கிளாசனுக்கு ரூ.23 கோடி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் காவ்யா மாறனின் முடிவு சரியானதல்ல என்று ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் அவர் ஏலத்தில் பங்கேற்றால், நிச்சயம் ரூ.25 கோடி வரை செல்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி