ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய தீர்மானம்
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அதன் உரிமையாளரான டியாகோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்தநிலையில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மதிப்பு 17,762 ரூபாய் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி குறித்த அணியை வாங்குவதற்கு சீரம் நிறுவனத்தின் CEO அதார் பூனாவாலா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ரோயல் சேலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியை முதலில் விஜய் மல்லையா வாங்கி இருந்தார்.
அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதன் பின்னர், டியாகோ நிறுவனம் குறித்த அணியை வாங்கியது.
இவ்வருடம் இடம்பெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ரோயல் சேலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி கிண்ணத்தை சுவீகரித்து செம்பியன் பட்டம் வென்ற நிலையில் அணியின் மதிப்பு உச்சத்தில் உள்ளது.
இதனால் மிகப்பெரிய தொகைக்கு ரோயல் சேலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய டியாகோ கணக்கிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.





